நினைவுகளின் நிழலில்
அப்போதெல்லாம் கலெக்டருக்கும் மக்களுக்கும் பெருசாய் தொடுப்புமில்லே… தொந்தரவுமில்லே… அவுக பாட்டுக்கு கோப்பு உண்டு டவாலி உண்;டுன்னு இருப்பாக… இவுகபாட்டுக்கு வயல் உண்டு வரப்பு உண்டுன்னு இருப்பாக…
மாவட்டத்துல இருக்கற பெத்தாம் பெரிய ஆபீசருங்களோடதான் பொத்தாம் பொதுவா பேசுவாங்க… எப்பவாவது ஒரு கூட்ட நாட்டத்தில் பேசும்போது, மரியாத நிமித்தம் அஞ்சாறு வார்த்தைகளை இங்கிலீஸ்ல சொல்லுவாங்க… என்னான்னு வெளங்காமே நம்ம கூட்டம் வாயப்பொளந்து கேட்டுக்கிட்டு இருக்கும்…
அவ்வளவுதான் எனக்கு ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் பத்தின அறிவு!...(?)
அவ்வளவுதான் எனக்கு ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் பத்தின அறிவு!...(?)
அப்படியாக்கொண்ட புத்திசாலியான என்னை ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்திலே, மாவட்ட உயரதிகாரிகளெல்லாம் குழுமியிக்கும் நெறஞ்ச சபையில,
“மங்களாபுரத்தை சேர்ந்த நீலா இங்க வந்திருக்கீங்களா! வந்திருந்தா… ப்ளீஸ்… கொஞ்சம் எந்திரிச்சு நில்லுங்க…!”
அப்படீன்னு ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் தெளிவா தமிழுல, அதுவும் மைக்குல சொன்னா எப்படி இருக்கும்? தடதடத்து எந்திரிச்சு நின்னேன்.
மேடையில் அமர்ந்திருந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷீலாராணி சுங்சத் ஐயுளு அவர்கள், ஒரு மல்லிகை சிரிப்போடு என்னை அழைத்து மேடையில் பேச வைத்தது இன்று நடந்தது போல் இருக்கிறது.
இருபத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டது!
இன்றளவும் ஒரு ஆத்மார்த்தமான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது!
இன்றளவும் ஒரு ஆத்மார்த்தமான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது!
ஷீலாராணி சுங்சத் IAS அவர்கள் எனது “கற்றது சிறையவு” புத்தகத்தை வெளியிட வந்திருந்த போது எடுத்தப்படம்.
அருமை...
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
அப்புறம்..என்னாச்சு?
ReplyDeleteமீதிக் கதைகளையும் அவ்வப்போது சொல்லவும். - நா.மு.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் நினைவலைகளில் தொடர்ந்து நீந்துங்கள்.
ReplyDelete